தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

rams

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update: பொருள் கொடுக்க இயலாதவர்கள் ஊக்கம் கொடுக்கலாமே! உங்கள் பின்னூட்டத்தை (feedback) ஒலிவடிவில் பதிவிடுங்கள். . . Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support read less
Society & CultureSociety & Culture

Episodes

167. அன்னங்களும் பட்சிகளும் - அம்பை
08-01-2023
167. அன்னங்களும் பட்சிகளும் - அம்பை
நாம் அனைவருமே ஒரு நாள் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருப்போம். பச்சிளம் குழந்தைக்கு கூட நினைவுகள் - தாயின் மொழி , புடவை. . .புலம்பெயர்ந்த குடும்பங்கள் மங்கலாகிப் போகும் நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள செய்யும் முயற்சிகள் அர்த்தமற்றவையாகின்றன அடுத்த தலைமுறைக்கு. . . நினைவுகளின் தொகுப்பாய் இந்தக் கதை. . . அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர். நான் பதிந்திருக்கும் அம்பையின் மற்ற கதைகள். 118. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support
166. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்
02-01-2023
166. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்
சாதீய கொடுமைகள் முக்கியமாக இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒன்று மேல்சாதியினரின் ஒடுக்குமுறைகள் ஏளனப்பேச்சுகள் கூனிக்குறுகச்செய்யும் இழிவுச் செயல்கள். மற்றொன்று மிகக்கொடிய சுயவிரக்கம் - எப்போதும் எங்கும் தன்னை தாக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேற முடியாத நிலைமை. இது ஒரு நெடுங்கதை. ஆனால் படித்த / கேட்ட பிறகு உங்களுக்குள் எழும் கேள்விகளிடம் இருந்து தப்ப முடியாது . . . நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள் 161. வணங்கான் - ஜெயமொகன் 147. தாயார் பாதம் 110. இங்கே , இங்கேயே 101. அப்பாவும் மகனும் 73. ஐந்தாவது மருந்து 54. பாடலிபுத்திரம் 27 - 2 . யானை டாக்டர் - இறுதி பகுதி 27 - 1 . யானை டாக்டர் - முதல் பகுதி 14. சோற்றுக்கணக்கு 8. மாபெரும் பயணம் --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support
164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன்
11-12-2022
164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன்
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை. அதோடு விடலைப் பருவ கவலைகளையும் சேர்ந்து கொண்டால்? அதிலும் கொடியது இதெல்லாம் நேர்வது ஒரு பெண்ணிற்கு. அம்மாவும் பெண்ணும் கட்டிக்கொண்டு அழுகையில் வாசகன் மனத்தை ஒரு பாறாங்கல் வந்து அடைக்கிறது. அறிவியல் வாத்தியாரின் அறியாமை, அதனால் சீண்டப்பட்டு படிக்கும் வாய்ப்பையே இழக்கும் மாணவி. . .பெண்ணுக்கு என்று ஒரு இலக்கணம் வகுத்து அடைத்து வைக்கும் சமுதாயம், அவள் உடலில் ஏற்படும் பிறழ்தலுக்கும் அவளையே காரணமாக்கி ஏறி மிதிக்கிறது. . .என்னை மிகவும் பாதித்த கதை. . . --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support