Sounds of Aanilai

Aanilai Yoga

Sounds of Aanilai is a humble initiative to present stotra malas adorned with pearls of bhakti , brought to the surface of the ocean of Sprituality and Devotion read less
MusicMusic

Episodes

Prayer for Healing: திருமுறை மருந்து - மக்கட் செல்வம் வாய்க்க, பட்டிமன்றம் முதலியனவற்றில் வாதத் திறமை பெறவும், எழுத்தாற்றல், தத்துவஞான தெளிவுபெற பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்.
Dec 30 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - மக்கட் செல்வம் வாய்க்க, பட்டிமன்றம் முதலியனவற்றில் வாதத் திறமை பெறவும், எழுத்தாற்றல், தத்துவஞான தெளிவுபெற பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 1 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. 2 மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும் பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. 3 விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 4 வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன் மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர் ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே. 5 தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில் பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 7 பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில் கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 8 கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள் ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான் வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று) உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 9 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின் வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென் றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 10 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே. 11 சுவாமி : திருவெண்காட்டீசர்; அம்பாள் : பிரமவித்யாநாயகி.
Prayer for Healing: திருமுறை மருந்து - தாயாரின் உடல்நிலை குணமாகவும், சுகப்பிரசவம் அமைவதற்கும், உறவினர் - நண்பர்கள் நட்பு நன்கு அமையவும், மனை முதலியன திறம்படக் கட்டி முடிப்பதற்கும்
Dec 30 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - தாயாரின் உடல்நிலை குணமாகவும், சுகப்பிரசவம் அமைவதற்கும், உறவினர் - நண்பர்கள் நட்பு நன்கு அமையவும், மனை முதலியன திறம்படக் கட்டி முடிப்பதற்கும்
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1 கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான் செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே. 2 மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல் செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும் எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 3 துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் பிறைமல்குசென்னி யுடையவன்எங்கள் பெருமானே. 4 கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும் சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 5 வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார் தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில் ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 6 வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும் சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார் பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 7 மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன் தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 8 அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக் கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும் இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டால் இகழாரே. 9 நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல் பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 10 தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன் ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார் வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. 11 சுவாமி : மாத்ருபூதேஸ்வரர்; அம்பாள் : மட்டுவார்குழலி.
Prayer for Healing: திருமுறை மருந்து - விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம்
Dec 28 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம்
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. 1 இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. 2 மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண் மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே. 3 நாலுகொ லாமவர் தம்முக மாவன நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள் நாலுகொ லாமறை பாடின தாமே. 4 அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம் அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே. 5 ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. 6 ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல் ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள் ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. 7 எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம் எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே. 8 ஒன்பது போலவர் வாசல் வகுத்தன ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ஒன்பது போலவர் பாரிடந் தானே. 9 பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. 10 இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம் நீங்கும்படி அருளிச்செய்தது.
Prayer for Healing: திருமுறை மருந்து - விஷக்காய்ச்சல், விஷக்கடி, செய்வினை - பில்லி - சூனியம் கோளாறு நீங்கவும், குரல் வளம் பெறவும், இளைய சகோதரன் நலம் பெறவும், எந்தக் காரியத்திலும் வெற்றி பெறவும்
Dec 28 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - விஷக்காய்ச்சல், விஷக்கடி, செய்வினை - பில்லி - சூனியம் கோளாறு நீங்கவும், குரல் வளம் பெறவும், இளைய சகோதரன் நலம் பெறவும், எந்தக் காரியத்திலும் வெற்றி பெறவும்
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 2 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 3 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 4 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 5 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 8 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 9 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 10 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக் கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது. 11
Prayer for Healing: திருமுறை மருந்து - கல்வியில் தலைசிறந்து விளங்க ஓத வேண்டிய திருப்பதிகம்
Dec 28 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - கல்வியில் தலைசிறந்து விளங்க ஓத வேண்டிய திருப்பதிகம்
சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 1 வண்டணைசெய் கொன்றையது வார்சடை கள்மேலே கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால் கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 2 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப் போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழும் காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 3 மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத் தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 4 ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய விருத்தனவன் வேதமென அங்கமவை யோதும் கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 5 விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான் எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலும் கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 6 ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர் சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத் தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக் காதினன் இருப்பது கருப்பறிய லூரே. 7 வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற் கேய்ந்தபுயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள் காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 8 பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல் கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 9 அற்றமறை யாவமண ராதமிலி புத்தர் சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறிய லூரே. 10 நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப் பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி : குற்றம்பொறுத்தநாதர்; அம்பாள் : கோல்வளையம்மை.
Prayer for Healing: திருமுறை மருந்து - வழக்குகளில் வெல்லவும், சகோதர / சகோதரிகள் வளமுடன் வாழவும் ஓத வேண்டிய பதிகம்.
Dec 28 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - வழக்குகளில் வெல்லவும், சகோதர / சகோதரிகள் வளமுடன் வாழவும் ஓத வேண்டிய பதிகம்.
வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1 இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2 செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3 நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4 காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5 பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6 மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7 அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8 அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9 பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10 காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 11 சுவாமி : வீழியழகர்; அம்பாள் : அழகுமுலையம்மை.
Prayer for Healing: திருமுறை மருந்து - குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அனைவரும் மகிழ்வுடன் வாழ பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
Dec 14 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அனைவரும் மகிழ்வுடன் வாழ பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 1 போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே. 2 தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம் வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப் பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே. 3 அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங் கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப் பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே. 4 அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங் கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப் பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 5 மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே. 6 குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங் கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே. 7 அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப் பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே. 8 நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர் அடியொடு முடியறி யாவழல் உருவினன் கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப் பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 9 தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம் ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின் காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப் பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே. 10 கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. 11
Prayer for Healing: திருமுறை மருந்து - திக்குவாய் கோளாறு நீங்கவும் பேச்சுத்திறமை மேம்படவும் ஓத வேண்டிய பதிகம்
Dec 14 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - திக்குவாய் கோளாறு நீங்கவும் பேச்சுத்திறமை மேம்படவும் ஓத வேண்டிய பதிகம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 1 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 2 கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 3 அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 4 தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 5 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 6 மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 7 கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 8 தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 9 தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 10 நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 11 கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 12 மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 13 தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 14 கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 15 நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ. 16 அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 17 சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 18 அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 19 அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 20
Prayer for Healing: திருமுறை மருந்து - வலது கண் பழுது நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்
Dec 14 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - வலது கண் பழுது நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 1 விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை *கொத்தை ஆக்கினீர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. 2 அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே. 3 துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறைஆள்வீர் இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே எனவேண்டா அருத்தி யுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதீரே. 4 செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர் எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று) உமக்காட் பட்டோர்க்குச் சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே. 5 தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப் புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது மனத்தால் வாடிஅடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே. 6 ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே ஏயெம் பெருமான் இதுவே ஆமா றுமக்காட் பட்டோர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக் காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே. 7 கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம் பழிதான் ஆவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே. 8 பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாங் காய்தான் வேண்டிற் கனிதான் அன்றோ கருதிக் கொண்டக்கால் நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 9 செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூ லட்டா னம்மே இடமாக் கொண்டீரே இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதீரே. 10 காரூர் கண்டத் தெண்டோள் முக்கண் கலைகள் பலவாகி ஆரூர்த் திருமூ லட்டா னத்தே அடிப்பே ராரூரன் பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே. 11
Prayer for Healing: திருமுறை மருந்து - இடது கண் பழுது நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்
Dec 14 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - இடது கண் பழுது நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்
ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 1 உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 2 திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 3 குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம்புமலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வறே. 4 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 5 திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 6 விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாம்உகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 8 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 9 எள்க லின்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன் நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே. 11
Prayer for Healing: திருமுறை மருந்து - உணவும் உடையும் குறைவின்றி கிடைக்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
Dec 14 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - உணவும் உடையும் குறைவின்றி கிடைக்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையேதருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 1 மிடுக்கிலாதானை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங்கொடுப் பாரிலை பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அடுக்குமேலம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 2 காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்றம் நற்கிளை பேணியேவிருந் தோம்புமேயென்று பேசினுங்கொடுப் பாரிலை பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண் புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆணியாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 3 நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் நடுங்கிநிற்குமிக் கிழவனை வரைகள்போல்திரள் தோளனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அரையனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 4 வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப் பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பாடினுங்கொடுப் பாரிலை பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே. 5 நலமிலாதானை நல்லனேயென்று நரைத்தமாந்தரை இளையனே குலமிலாதானைக் குலவனேயென்று கூறினுங்கொடுப் பாரிலை புலமெலாம்வெறி கமழும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அலமராதமர் உலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 6 நோயனைத்தடந் தோளனேயென்று நொய்யமாந்தரை விழுமிய தாயன்றோபுல வோர்க்கெலாமென்று சாற்றினுங்கொடுப் பாரிலை போயுழன்றுகண் குழியாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7 எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் ஈக்கும்ஈகிலன் ஆகிலும் வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அள்ளற்பட்டழுந் தாதுபோவதற் கியாதுமையுற வில்லையே. 8 கற்றிலாதானைக் கற்றுநல்லனே காமதேவனை யொக்குமே முற்றிலாதானை முற்றனேயென்று மொழியினுங்கொடுப் பாரிலை பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அத்தனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 9 தையலாருக்கோர் காமனேயென்றுஞ் சாலநல்வழக் குடையனே கையுலாவிய வேலனேயென்று கழறினுங்கொடுப் பாரிலை பொய்கையாவியின் மேதிபாய்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் ஐயனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 10 செறுவினிற்செழுங் கமலமோங்குதென் புகலூர்மேவிய செல்வனை நறவம்பூம்பொழில் நாவலூரன் வனப்பகையப்பன் சடையன்றன் சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய பாடல்பத்திவை வல்லவர் அறவனாரடி சென்றுசேர்வதற் கியாதுமையுற வில்லையே. 11
Prayer for Healing: திருமுறை மருந்து - வறுமை நீங்கி பொருளாதார நிலை மேம்பட ஓத வேண்டிய பதிகம்
Dec 14 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - வறுமை நீங்கி பொருளாதார நிலை மேம்பட ஓத வேண்டிய பதிகம்
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 4 கையது வீழினுங் கழிவுறினுஞ் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 6 வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 7 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 8 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 10 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே. 11 சுவாமி : மாசிலாமணி ஈஸ்வரர்; அம்பாள் : ஒப்பிலா முலையம்மை.
Prayer for Healing: திருமுறை மருந்து - வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின்றி வாழ பாட வேண்டிய பதிகம்.
Dec 13 2022
Prayer for Healing: திருமுறை மருந்து - வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின்றி வாழ பாட வேண்டிய பதிகம்.
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. 1 மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. 2 ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத் தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 3 நல்லவர் தீயரெ னாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்லந மன்தமர் கொண்டு போமிடத் தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 4 கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில் தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே. 5 தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. 6 வீடு பிறப்பை யறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாடொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே. 7 வண்டம ரோதி மடந்தை பேணின பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே. 8 கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் கார்வண மாவன அஞ்செ ழுத்துமே. 9 புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திர மாவன அஞ்செ ழுத்துமே. 10 நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் துற்றன வல்லவர் உம்ப ராவரே. 11