For All Our Kids Podcast

RAMA NILA

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil. read less
Kids & FamilyKids & Family

Episodes

திருக்குறள்-தீவினையச்சம்-1
12-04-2024
திருக்குறள்-தீவினையச்சம்-1
திருக்குறளின் 21வது அதிகாரம்  தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள்  இந்த பகுதியில் இடம் பெறுகிறது.இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. தீய செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும். நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நம்மால் மாற்ற முடியாது. தீய செயல்களைத் தவிர்த்து அறநெறியில் சென்றால் நன்மை அடையலாம். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
திருக்குறள்-புறங்கூறாமை 1
19-02-2024
திருக்குறள்-புறங்கூறாமை 1
இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.புறங்கூறாமை என்றால் ஒருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். மனதில் நேர்மை இல்லாதவரும், தைரியம் இல்லாதவரும் தான் பிறரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பின்னால் இழிவாகப் பேசுவார்கள். தன்னால் அடைய முடியாததைப் பிறர் அடையும் போது பொறாமையில் சுயநலமாக, வஞ்சகமாகப் பிறரைப் பற்றிப் புறங்கூறுவார்கள். பிறரைத் தாழ்த்தி கூறி, தன்னை உயர்வாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும் புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
ஹிதோபதேசம்-மூன்று மீன்கள்
15-01-2024
ஹிதோபதேசம்-மூன்று மீன்கள்
மூன்றாவது பகுதியான 'போர் தொடுத்தல்'  பகுதியில்  ராஜா ஹிரண்யகர்பா  மயில் மன்னனுக்கு எதிரான போரில் காக்கை மேகவர்ணாவின் சூழ்ச்சியால்   தோல்வியுற்றது. புத்திசாலியான குரு விஷ்ணு ஷர்மா கதைகளின் தொடரை விவரிக்கையில் ஒரு போரை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து கொள்கைகளையும் உள்ளடக்கியிருந்தார். எந்த நாடும் செழிக்க வேண்டுமானால் அங்கே அமைதி இருக்க வேண்டும். நான்காவது பகுதியில் கதைகளை ஆரம்பிக்கும் போது விஷ்ணு ஷர்மா 'அமைதி' அல்லது 'சமாதானம் செய்வது' பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். குரு தன் மாணவர்களுக்குச் சொல்லும் கதையைக் கேட்டு ரசியுங்கள்.  '