26-07-2023
கொக்கோகம்-இல்லற ரகசியம் | Kokkokam Illara Ragasiyam Episode 16-30
கொக்கோகத்தை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன். கவிக்கு அரசர், புவிக்கும் அரசரான அதிவீரராம பாண்டியனின் இனிமையும் எளிமையும், அர்த்த புஷ்டியும் கொண்ட கவிதைகளை விஷயத்துக்காக மட்டுமின்றி கவிதையின் இனிமைக்காகவே படித்து ரசிக்கலாம். விளக்க உரையைப் பற்றி சில வார்த்தைகள். அன்பர் புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதியுள்ள ` குறள் தந்த இல்லற இன்பம்’ என்ற நூலைப் படித்தவர்கள் அவரின் உயரிய தமிழாராய்ச்சியை பற்றி அறியாமலிரார். எளிய எல்லோருக்கும் புரியும் நடை. தம்பதிகளிடையே தோன்றும் சிக்கல்களை நீக்கி, ஊடல் அகற்றி, அவர்கள் வாழ்வில் இன்பநாதத்தைக் கிளப்பும், வழிகாட்டியாக இந்நூல் திகழுமென்பது நிச்சயம்.